கோவிட் -19 அச்சுறுத்தல்!  புதிய ஆபத்தான கட்டம் நம் முன்னால் வருகிறது… எச்சரிக்கை விடுக்கிறது உலக சுகாதார அமைப்பு 

“கொரோனா கோவிட் -19 வைரஸ் உலகளாவிய தொற்றுநோயானது தற்போது புதிய ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. இது கடும் ஆபத்தான காலப்பகுதியாகும். இதனால் மனிதர்கள் வேகமாக கோவிட் – 19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகுவார்கள்.” என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அடினோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அடினோம் மேலும்  கருத்து தெரிவிக்கையில்,

“கொரோனா பற்றிய உலகளவிலான புள்ளிவிபரங்கள் தினமும் வெளியிடப்படுகின்றன. கடந்த வியாழக்கிழமை மாத்திரம் உலகளவில் கோவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,81,000 ஐ தாண்டியுள்ளது. இதனால் சகலரும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.” என்றார்.

தினசரி உலகளாவிய தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை (18) 1,81,232 ஆக உயர்ந்தது. இது வெள்ளிக்கிழமை (19) 1,43,073 ஆகவும், சனிக்கிழமை (20) 1,38,980 ஆகவும் அதிகரித்துள்ளது.

” தினமும் பதிவாகும் கொரோனா தொற்று புள்ளிவிபரங்களின்படி,  பாதி அமெரிக்க பிராந்தியத்தைச் சேர்ந்தவை” என்று வீடியோ தொழில்நுட்பம் மூலம் நடாத்தப்பட்ட ஊடக மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் தெரிவித்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.