திசைகாட்டியின் அரசியல் பற்றி பெண் சட்டத்தரணி நிரூபா சேரசிங்க மனம் திறக்கின்றார்

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளராக பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ள பெண் சட்டத்தரணி நிரூபா சேரசிங்க திசைகாட்டியை பற்றி மனம் திறந்து இவ்வாறு கூறுகிறார்.

திசைகாட்டியில் அரசியல் மிகவும் சுலபம். கூட்டங்களுக்குச் சென்றால் எங்களுக்கு மத்தியில் உயர் தாழ்வு இல்லை, எல்லோரும் சமம்.

சந்திக்கும் ஒவ்வொரு மனிதனின் பேச்சும் கவலையும் இந்த நாடு விழுந்துள்ள அதள பாதாளத்திலிருந்து ஒரு சானளவாவது மேலெடுக்க வேண்டுமே என்பதாக இருக்கும்.

எதிர் கட்சி வேட்பாளர்களை தனிமனித தாக்குதல் செய்வதில்லை, அவர்களின் அரசியல் மட்டும் விமர்சிக்கப்படும்.

சோற்றுப் பக்கட்டை எதிர்பார்த்து வருவோர் எவருமில்லை, ‘எங்கள் வீட்டில் ஒரு வாய் சாப்பிட்டு போங்க’. இந்த அன்புக் கோரிக்கையை தவிர்க்க முடியாமல் தவிப்பேன்.

ஓர் ஊரிலோ கிராமத்திலோ இருக்கும் மரியாதைக்குரிய பெரியவர்; மனிதநேயம் மிக்கவர் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கும் சக்தியாக இருப்பார்.

அநேகமான வீடுகளில் தோழர் ரோஹன விஜேவீரவின் படம் இருக்கும், குறைந்தது புத்தக அடையாளமாவது இருக்கும்.
நூறு ஆண்களுக்கு மத்தியிலும் நான் உணரும் பாதுகாப்பு, பஸ்ஸிலோ புகையிரதத்திலோ பயணிக்கும் பெண்களில் 90% இம்சைகளுக்கு ஆளாகும் நாட்டில் அல்லவா என்றெண்ணி பூரிப்பேன்.

‘எவ்வளவு கொடுப்பீர்கள்’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்க, செய்து தருகின்றோம்’ என்ற கோரிக்கை ஒலிக்கும்.

திசைகாட்டியினால் நான் சந்திக்கும் மனிதரர்கள் அனைவரும், உண்மையான மனிதர்கள்.

கசப்பான அரசியலில் போன்று கசப்பான சமூகத்திலும் உண்மையான மனிதர்களின் அரசியல் புகலிடம் தேசிய மக்கள் சக்தி அன்றி வேறென்ன இருக்க முடியும்.

Leave A Reply

Your email address will not be published.