அனுர திசாநாயக்க ஜனாதிபதி ஆணையத்தில்!
ஜனாதிபதி ஆணையத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ஆணையகத்திற்கு இன்று காலை 11:30 மணிக்கு அனுர வந்தார்.
அவன்கார்ட் சம்பவம் தொடர்பாக அரசியல் பழிவாங்கலை விசாரிக்கின்ற ஜனாதிபதி ஆணையகத்திற்கு நிசங்க சேனாதிபதி அளித்த புகாரின் பேரில் அனுர திசாநாயக்க அங்கு அழைக்கப்பட்டிருந்தார்
அரசு அதிகாரிகள். அரசு நிறுவனங்களின் ஊழியர்கள். ஆயுதப்படை உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினருக்கு மட்டுமே இந்த ஆணையகத்தில் புகார் அளிக்க முடியும் என்றும், நிசங்க சேனாதிபதி சட்டப்பூர்வமாக புகார்களை அளிக்க முடியாது என்றும் சட்டமா அதிபர் நேற்று (22) ஆணையத்திற்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.