ராஜபக்சாக்களைச் சுற்றி திருடர்களின் வளையமும், அதனுடன் ஒரு மோசமான வணிக வளையமும் உள்ளது. அதிலொன்று அவன்காட்! – ஜேவிபி தலைவர் அநுர குமார திசாநாயக்க கூறுகிறார்.

“நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும், ஊழலுக்கான போராட்டத்தை இடை நிறுத்த மாட்டோம். ராஜபக்சாக்களைச் சுற்றி திருடர்களின் வளையம் உள்ளது. அதனுடன் ஒரு மோசமான வணிக வளையமும் உள்ளது. அதிலொன்று அவன்காட்.” இன்று காலை 11.30 மணிக்கு ஜனாதிபதி ஆணையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜேவிபி தலைவர் அநுர குமார திசாநாயக்க ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

அவன்கார்ட் சம்பவம் குறித்த அரசியல் பழிவாங்கலை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணையம், நிசங்க சேனாதிபதி அளித்த புகாரின்படி, அநுர குமார திசாநாயக்கவை வரவழைத்ததோடு, விசாரணையின் பின்னர் வெளியே வந்த அநுர குமார திசாநாயக்க ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

அநுர குமார திசாநாயக்க

இந்த ஆணையம் நான் பதில் கூற பொறுப்புடையவர் என பெயரிட்டுள்ளது, எந்த காரணத்திற்காகவென்ற காரணத்தையும் மற்றும் மற்றைய எல்லா ஆவணங்களையும் நாங்கள் கேட்டோம்.

எதிர்காலத்தில் இந்த ஆணையத்திற்கு வருவதா? இல்லையா? என்பது பற்றி எங்களது வழக்கறிஞருடன் கலந்துபேசி தீர்மானிப்போம். எங்களை சிறையில் அடைத்தாலும் நாங்கள் ஊழலுக்கான போராட்டத்தை ஒருபோது நிறுத்த மாட்டோம். ராஜபக்சாக்களைச் சுற்றி திருடர்களின் வளையம் உள்ளது. அதனுடன் ஒரு மோசமான வணிக வளையமும் உள்ளது. அதிலொன்று அவன்காட். கோட்டாபய ராஜபக்ச தலையிட்டு கடற்படையின் வருமானத்தை அவன்காட் என்ற மோசடி வணிகத்திடம் கொடுத்தார்.

அவன்காட் என்பது கோட்டாபய ராஜபக்சவின் ஆதரவோடு நடத்தப்படுகின்ற வணிகமாகும். நாங்கள் ஜனாதிபதி ஆணையகத்திற்கு வந்தது பொதுமக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் ஊழல்வாதிகளை அம்பலப்படுத்துவதற்கு ஆகும்.”

கே.டி.லால் காந்த

எங்கள் கட்சியின் தலைவர் அநுர திசாநாயக்க இன்று சட்டத்தரணி இல்லாது ஆணைக்குழுவின் முன் ஆஜரானார். தானே ஒரு சட்டத்தரணியாகி, தானே இந்த பொறுப்பை ஏற்று முன்சென்றார். இந்த நாட்டின் தேசிய போராட்டத்தின் ஒரு பகுதிதான் திருட்டு, ஊழல் மற்றும் மோசடிகளை நிறுத்துவது. இன்று இது திருடர்களுக்கு சொர்க்கமாக மாறியுள்ளது. இந்த ஆணையத்திற்கு எம்மை அழைத்ததை நாம் அனைத்து மக்களையும் ஜனாதிபதி ஆணையம் அழைத்ததாகவே கருதுகிறோம். அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி நாங்கள் இந்த போராட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வோம் . இது எங்களுடையது மட்டுமல்ல, எல்லா மக்களினதும் வேண்டுகோள் ஆகும்”

Leave A Reply

Your email address will not be published.