அநுர இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி ஆணையத்திற்கு!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதியாதி ஆணையகத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க இன்று (26) இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி ஆணையகத்திற்குச் சென்றார்.

அரச அதிகாரிகள் மீதான அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணையகத்திடம் அவன்கார்ட்டின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரிலேயே அவர் மறுமுறையும் வரவழைக்கப்பட்டார்.

அரசியல் பழிவாங்களுக்கு உள்ளான அரசு அதிகாரிகள், அரசு நிறுவனங்களின் ஊழியர்கள், ஆயுதப்படையினர் மற்றும் காவல்துறையினருக்கு மட்டுமே ஜனாதிபதி ஆணையத்திடம் புகார் அளிக்க முடியும் என்றும், நிசங்க சேனாதிபதி இவர்களுக்குள் அடங்காததால் சட்டப்படி அவருக்கு ஜனாதிபதி ஆணையகத்தில் புகார்களை அளிக்க முடியாது என்று சட்டமா அதிபர் கடந்த 22 ஆம் தேதி ஆணையத்திற்கு தெரிவித்திருந்தார்.

23 ஆம் தேதி முதல் முறையாக கமிஷனுக்குச் சென்ற அனுரா திசாநாயக்க, புகாரை விசாரிக்க சட்ட அதிகாரியிடம் கேள்வி எழுப்பியதோடு புகாரின் நகல்களையும் கோரியிருந்தார்.

கடந்த 23ம் திகதி முதற் தடவை ஜனாதிபதி ஆணையகத்திற்கு சென்றிருந்த அநுர திஸாநாயக்க, புகாரை விசாரிக்க ஆணையகத்திற்கு இருக்கும் சட்ட அதிகாரம் பற்றி விசாரித்ததோடு, புகாரின் நகல்களை கேட்டிருந்தார். அத்தோடு சட்டத்தரணியின் உதவியில்லாது ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.