மஹிந்தானந்தவால் சங்கக்கார ஐ.சி.சி தலைவர் பதவியை இழக்கிறாரா?

உலக கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு குமார் சங்கக்கார போட்டியிடுவார் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது. அதனால் அதைத் தடுப்பதற்கான வேலையை இந்தியா மகிந்தானந்த அலுத்கமகேவிடம் கொடுத்ததோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் திடீரென கூண்டுக்குள் எறிந்த கல் போல தோன்றியதற்கு எந்த காரணமும் இல்லை.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த விடயத்தை திடீரென குழப்பியடித்து அமளித்துமளியாக்க வேறெந்த காரணமும் இல்லை. இவ்வாறு மறைவாக மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரலினுடைய இலக்கு உலகப் புகழ் பெற்ற கிரிக்கட் வீரரான சங்ககார ஆகும்.

குமார சங்கக்கார போன்ற திறமையான வீரர் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் புக்கிகள் செய்த பாரிய ஊழல்கள் பற்றி அறிந்திருப்பதால், இந்த புக்கிகளின் பெரிதும் பாதிக்கப்படுவர் என்பதாலும், இதைத் தடுப்பதற்காக மஹிந்தானந்தாவிடம் இந்தியா மற்றும் புக்கிகள் ஏராளமான பணத்தைக் கொடுத்துள்ளதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

2011ம் ஆண்டில் இருந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே அண்மையில் தனியார் தொலைகாட்சி அலைவரிசையில் ” 2011ம் ஆண்டு இடம்பெற்ற கிரிக்கட் உலகக்கிண்ணம் இந்தியாவுக்கு தாரைவார்க்கப்பட்டது” என்று குறிப்பிட்டது விளையாட்டுக்காகவல்ல! இதன் நோக்கம் மிக சிக்கலானது என தெரிகிறது.

ஐ.சி.சி.க்கு புகார் அளிக்கப்பட்டால், விசாரணை தொடங்கப்படும். அதனால் குமார் சங்கக்கார ஐ.சி.சி தலைவராவதற்கான  வாய்ப்பை இழக்க நேரிடும்.

மகிந்தானந்தாவின் கூற்று காரணமாக, 2011 உலகக் கோப்பையில் விளையாடிய வீரர்கள் கூட கிளர்ந்தெழுந்துள்ளனர். அதன்படி, மஹிந்தானந்தாவின் அறிக்கைக்கு எதிராக அவர்கள் தங்கள் கருத்துக்களை காரசாரமாக முன்வைத்தனர். அதேநேரம், இத்துரோகச் செயலில் வீரர்கள் ஈடுபடவில்லை என்று முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

இருப்பினும் விசாரணை ஆரம்பிக்கப்படுமானால், 2011 கிரிக்கட் உலகக் கிண்ண போட்டிக்கான இலங்கை அணி தலைவராகவிருந்த குமார் சங்கக்காரவும் விசாரிக்கப்படுவார்.

ICC Elections : Sri Lanka Cricket declares, “ready to support Sourav Ganguly as ICC Chairman”

 

Leave A Reply

Your email address will not be published.