MCC ஒப்பந்தத்தின் அறிக்கை ஜனாதிபதியிடம் மக்களுக்கு!

எம்.சி.சி ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்த குழுவின் இறுதி அறிக்கை நேற்று (25) ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்பரிந்துரைகளை பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வருமாறு ஜனாதிபதியினால்  ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜெயசுந்தரவுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த அறிக்கை 24ம் திகதி பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, பிரதமரின் தலைமையில் அது அமைச்சரவையிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எம்.சி.சி ஒப்பந்தத்தின் ஆறு மாத ஆய்வுக்கான மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷனின் முன்மொழிவை மறுஆய்வு செய்த குழு பல்வேறு துறைகளின் கருத்துகளையும் திட்டங்களையும் பரிசீலித்தது. பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஒப்புதலோடு இக்குழு நியமிக்கப்பட்டதோடு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் லலித்சிரி குணருவன் அதன் தலைவராக பணியாற்றினார். மேலும், போக்குவரத்து பொருளாதார நிபுணர் டி.எஸ்.ஜெயவீர, ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜெயவர்தன மற்றும் பட்டய கட்டிடக் கலைஞர் நாலக  ஜெயவீர ஆகியோர் குழுவின் மற்ற உறுப்பினர்களாக இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.