மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்பு பறிபோகும் அபாயத்தில் 20,000 இலங்கையர்கள்!

கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் 20,000 இலங்கையர்கள் வேலை இழப்பு உட்பட பல இடர்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் சில நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத பிரச்சனை நிலவுவதோடு, மேலும் சிலருக்கு குறைவான சம்பளத்தை பெரும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், பலருக்கு வேலைநேரம் குறைக்கப்பட்டு விட்டதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை,  ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் கோவிட் -19 பரவியதால் வெளிநாட்டில் வேலை தேடிக்கொண்டிருந்த சுமார் 30,000 பேர் தனது வெளிநாட்டு வேலை வாய்ப்பை  இழந்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.