அடுத்தவாரம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது  – அரசாங்கம் தெரிவிப்பு

கொவிட் 19 வைரஸ் பரவல் குறித்த வதந்திகள் காரணமாகவே மாணவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது என்பதற்காக பாடசாலைகள் மூடப்பட்டது. எவ்வாறு இருப்பினும் அடுத்த வாரம் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இவற்றைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொவிட் -19 வைரஸ் பரவலை குறித்த பொய்யான பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்டவுடன் அதனை அடிப்படையாக கொண்டு மாணவர்களை அனாவசியமாக அச்சுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்ற காரணத்தினால் தான் ஒரு வாரகாலத்திற்கு பாடசாலைகளை மூடுவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. மாணவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை தடுக்கவே பாடசாலைகள் மூடப்பட்டது ஆனால் பல்கலைக்கழககங்கள் மூடப்படவில்லை. ஏனென்றால் இறுதி ஆண்டு மாணவர்களை மாத்திரமே  பல்கலைக்கழகத்திற்கு அழைக்கப்பட்டனர். அவர்களுக்கான பரிட்சைகளை நடத்த வேண்டும், அவ்வாறான நிலையிலும் விடுதிகளில் கூட ஒரு அறையில் ஒருவர் என்ற அடிப்படையில் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிப்பது குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டது. கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும ஜனாதிபதி மற்றும் பிரதமரை தெளிவு படுத்தினார். எவ்வாறு இருப்பினும் அடுத்த வாரமளவில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. பெரும்பாலும் அடுத்தவாரம் பாடசாலகள் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்க முடியும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.