அரசாங்கம் முழுமையாக ஜனநாயகத்தை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது – தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் வேட்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜயநாயக்க

ராஜபக்ச அரசாங்கம் முழுமையாக ஜனநாயகத்தை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக  தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் வேட்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.
2020.7.14 தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும்,
“ராஜபக்சவின் அரசாங்கம் தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோரி நிற்கிறது. அவர்கள் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக தமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை வேண்டும் என கூறுகிறார்கள். ஆனால் இதுவரைக்கும் அந்த அரசியல் அமைப்பு என்ன என்பது யாருக்கும் தெரியாது. இலங்கையில் ஒவ்வொரு முறையும் கொண்டு வரப்படுகின்ற அரசியல் யாப்புகள் ஆட்சியாளர்களுக்கு சார்பாகவே அமைந்துள்ளன. ஆனால் தற்போது ராஜபக்ச 19ஆவது திருத்தத்தை இல்லாது செய்து முழுமையாக ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நமக்குத் தெரிகிறது.” என்று தெரிவித்தார்.
Leave A Reply

Your email address will not be published.