தாஜுதீன் கொலை வழக்கு வேறு திசையில் திரும்புகிறது
பிரபல ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் கொலை வழக்கில் சந்தேகநபர்களில் ஒருவரான முன்னாள் நீதிமன்ற மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர இறந்துவிட்டார் எனவும், மற்றொரு சந்தேகநபரான மேற்கு மாகாண முன்னாள் உப பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்க கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளார் என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (16) நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.
கொழும்பு முன்னாள் நீதிமன்ற மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர மற்றும் முன்னாள் உப பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்க ஆகியோர் மீது வாசிம் தாஜுதீன் வழக்கில் ஆதாரங்களை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
17-05-2012 அன்று சாலை விபத்தில் தாஜுதீன் கொல்லப்பட்டார். ஆரம்பத்தில் அது விபத்து என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இது ஒரு கொலை என விசாரிக்கப்படுகிறது.