தேங்காய் எண்ணெய் திருட்டுத்தனமாக இறக்குமதி செய்யப்பட்டது

கோவிட் -19 தொற்றுநோயால், இறக்குமதியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள அதேநேரம், பெரும்புள்ளிகள் சிலரின் தலையீட்டால் 63 மெட்ரிக் டன் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஒரு மெட்ரிக் டன் 1,075 அமெரிக்க டொலருக்கு இறக்குமதி செய்யப்பட்டதோடு, தேங்காய் எண்ணெய் பங்குகளின் மொத்த மதிப்பு 67,725 அமெரிக்க டொலர் ஆகும். இது நம் நாட்டு நாணயத்தின் மதிப்பிற்குப் பார்த்தால் 12,529,125 ரூபா ஆகும்.

இந்த இறக்குமதி தொடர்பான விடயத்தை சுங்க அதிகாரிகள் இரகசியமாக வைத்துள்ளனர். இந்த மாத முதலாம் திகதி விலைப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 14 ஆம் திகதி தேங்காய் எண்ணெய் பங்கு வெளியிடப்பட்டது.

இருப்பினும், சுங்க ஊழியர்கள் இதை கடுமையாக எதிர்த்ததோடு, இது தேங்காய் எண்ணெய் மோசடியின் தொடக்கமாக இருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.