தேர்தல் முடியும் வரை பாடசாலைகளை மூடுவதற்கு திட்டம்

உலகளாவிய கொரோனா தொற்றுநோயால் எதிர்வரும் பொதுத் தேர்தல் முடியும் வரை இலங்கையின்  அனைத்துபாடசாலைகளையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஒகஸ்ட் 5 ம் திகதி பொதுத் தேர்தல் முடியும் வரை பாடசாலைகளை மீண்டும் திறக்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் கல்வி அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக கல்வி அமைச்சகம் அடுத்த சில மணி நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கடமைகளைச் செய்ய தொடர்புபட்ட  பாடசாலைகள் மட்டுமே திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.