சிலருக்கு அமைச்சு பதவி இல்லாவிட்டால் காலைக்கடனைகூட நிறைவேற்ற மனம்வராது – SLPP இன் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பி. ரத்னாயக்க 

சிலருக்கு அமைச்சு பதவி இல்லாவிட்டால் காலைக்கடனைகூட நிறைவேற்ற மனம்வராது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பி. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பத்தனை பகுதியில் நேற்றிரவு (17) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“அவர்கள்தான் அந்தபக்கம், இந்த பக்கம் என தாவுகின்றனர். நாளை எந்த பக்கம் தாவுவார்கள் எனவும் தெரியாது. கட்சி தாவும் தவளைகள் எமது பக்கமும் உள்ளன. அவை எந்நேரத்திலும் பாயக்கூடும். அத்துடன், சுற்றுலாப் பறவைகளும் வருகின்றன. ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பிறகு அவை பறந்துவிடும். உங்கள் புள்ளடி மூலம் சிறந்த பதிலடியை கொடுக்கவேண்டும்.” என்றார்.

பொதுத் தேர்தல் நிறைவுற்றபின் அமைச்சுப் பதவிக்காகவும், வரப்பிரசாதங்களுக்காகவும் மக்களது வாக்குகளை காட்டிக்கொடுத்து மாறி மாறி கட்சித் தாவுதல்கள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்க முடிகிறது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பி. ரத்னாயக்க அவர்களே ஏற்றுக்கொண்டார் மற்றைய அணியின் சந்தர்ப்பவாதிகளைப் போல தம் அணியிலும்  சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்று. ஆகவே வாக்காளர்கள் தாம் அளிக்கும் வாக்கு குறித்து அவதானத்துடன் இருக்கவும்.

 

Leave A Reply

Your email address will not be published.