பாராளுமன்ற  தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி  பூரணமான ஆதரவு

தமிழ்ப்பேசும் மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்கவும் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவும் எதிர்வரும் மாதம் 5 ஆம் திகதி நடை பெறவுள்ள பாராளுமன்ற  தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி தனது பூரணமான ஆதரவை வழங்குவதென முடிவெடுத்துள்ளது.

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் சிறி இராஜராஜேந்திரா மற்றும் ராஜதுரை ஆகியோர் கையெழுத்திட்டு ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையிலையே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, வடகிழக்கு மலையகம் உட்பட்ட இலங்கையில் சகல பாகங்களிலும் வசிக்கும் தமிழ்ப்பேசும் மக்கள் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப உரிமைகளைப் பெற்று சமதாதனத்துடனும் சந்தோஷமாகவும் வாழக்கூடியவகையில் அவர்களது சிவில் அரசியல் மற்றும் பொருளாதார சமூக கலாசார உரிமைகளுடன் அனைவரது அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்பட உழைக்க வேண்டும் என்று அடிப்படையிலையே மக்களால் அடையாளம் காணப்பட்ட பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாது காக்க தமிழர் பிரநிதிகளை பாதுகாக்க தமிழர் பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்புவது. தமிழ்ப்பேசும் மக்களின் கடமையாகும். இலங்கைப் பாராளுமன்றம் இனவாத அடிப்படையிலையே கட்டமைக்கப்பட்டிருப்பதால் அதன் முக்கிய அரசியல் தீர்மானங்களும் முடிவுகளும் இனவாத கட்டமைப்பை பலப்படுத்துவதையே உறுதி செய்யும். கடந்த காலங்களில் பாராளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் இதனையே உறுதி செய்துள்ளது. தமிழ் இனத்தை அழிப்பதற்காக இலங்கை பாராளு மன்றினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் இராணுவத்துக்கான விஷேட அதிகார சட்டம் இராணுவத்துக்கான அதிக நிதி ஒதுக்கீட்டுக்கான சட்டங்கள் உட்பட பல்வேறு சட்டங்களின் பட்டியல் நீண்டுகோண்டேபோகும்.

தொடாந்து மாறிமாறி ஆட்சிக்கு வரும் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் பெரும்பான்மை மக்களுக்கு சாதகமான திட்டங்களை வகுத்து செயற்படுவதுடன் எம் இனத்தை அழிப்பதற்காக செயற்றிட்டங்களை வகுத்து வருகின்றனர். இந்நிலையில் இதனை எதிர்த்து அரசியல் முன்னெடுப்புக்களை பாராளுமன்றத்தினாலையோ சர்வதேசத்தினாலையோ பேசக்கூடிய மக்களால் இனங்காணப்பட்ட சக்தியாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உள்ளது. விமாசனங்களுக்கு அப்பால் அனைத்து தமிழ்த்தரப்புக்களும் விட்டுக்கொடுப்பக்களுடன் ஐக்கியமாவதுடன் அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அதனை பலப்படுத்துவதேஇன்றைய தேவையாகவுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, தந்தை செல்வநாயகம் அவர்கள் எமது தமிழ் தலைமைகளின் ஒற்றுமையுடன் தமிழ்ப்பேசும் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காகவே 1976 ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்போன்ற பிரதான கட்சிகளை ஒன்றிணைத்து தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கினார். அதேபோன்று விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் 2001 ஆம் ஆண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உருவாக்கினார். அன்றிலிருந்து இன்றுவரை சுமார் 19 வருடங்கள் தமிழர் விடுதலைக்கூட்டணி மக்கள புரட்சிகர விடுதலை முன்னணி அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் போன்ற கட்சிகளும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலிருந்து செயற்பட்ட பிரமுகர்களும் தனித்தனியே பிளவுபட்டு பிரிந்து சென்று கட்சிகள் அமைத்து செயற்பட்டு வருகின்றனர்.

இது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பலவீனத்தையே காட்டுகிறது. எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பானது தனது செயற்பாடுகளை ஆரோக்கியமானதாக விமாசனத்துக்கு உட்படுத்தி அனைத்து தமிழ் மக்களையும் உள்வாங்கி தமிழர் பரச்சனையை தீர்ப்பதற்கான பயணத்தை மேற்கொள்ளவேண்டும். அனைத்து தமிழ்த்தரப்புக்களும் இவ்வாறு பிளவு பட்டு செயற்படுவதனால் உரிய இலக்கிலிருந்து விடுபட்டு தமிழ்ப்பேசும் மக்களுடைய வாழ்வை சீர் குலைத்த வரலாற்று துரோகிகளாக கருதப்படுவார்கள் எனவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உரிய பலத்துடன் பாராளு மன்றுக்கு அனப்பிவைக்கவேண்டுமென் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.