ஓகஸ்ட் 05 க்கு முன்னர் MCC  ஒப்பந்தம் பற்றிய தனது நிலைப்பாட்டைக் கூறுமாறு நாங்கள் ஜனாதிபதிக்கு சவால் விடுக்கிறோம் – தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜித ஹேரத் 

 

எம்.சி.சி.  ஒப்பந்தத்தை நாட்டு மக்கள் இப்போது கடுமையாக எதிர்க்கின்றனர். ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை தற்போது நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். உங்களால் முடிந்தால் தேர்தலுக்கு முன்பு உங்களது நிலைப்பாட்டை மக்களுக்கு கூறுமாறு நாங்கள் உங்களுக்கு சவால் விடுகிறோம். என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளரும் தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய விஜித ஹேரத் கூறியுள்ளார்.

கடந்த 19 (ஞாயிற்றுக்கிழமை) திகதி பத்தரமுல்ல பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சவால் விடுத்துள்ளார். அவர் இது பற்றி மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த ஒப்பந்தம் இலங்கைக்கு அவசியம் இல்லையென்றால், அதனை எழுத்து மூலமாக அமெரிக்காவுக்கு தெரிவிக்குமாறு நாங்கள் கேட்கிறோம். தற்போது அரசாங்கத்தரப்பு அமைச்சர்கள் ஒவ்வொரு பொய் கதைகளைத் தற்போது கூறுகிறார்கள். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்த அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்று அமெரிக்க தூதர் கூறுகிறார். அன்று கோட்டாபயவும் ரொபர்ட் ஓ பிளேக்கும் இணைந்து எக்ஸா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் கோட்டாபய  கையெழுத்திட மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் இந்த ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்துமாறு தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் கோருகிறோம்.” என்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.