முன்னாள் பிரதமர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (திங்கட்கிழமை) முன்னிலையாகியுள்ளார்.
ஈஸ்ட்டர் தாக்குதல் பற்றிய வாக்குமூலத்தை வழங்குவதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.
கடந்த 21ம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. அன்றைய தினம் தனக்கு ஆஜராக முடியாது என்று கூறிய முன்னாள் பிரதமர் 31 ம் திகதி தான் ஆஜாராகுவதாக கூறியதற்கு அமைய இன்று முன்னிலையாகிவுள்ளார்.