இந்தியாவில் கோவிட் – 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 78 ஆயிரத்து 512 பேர் கோவிட் – 19 வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரையில் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 36 லட்சத்தைக் கடந்துள்ளது.

அத்தோடு கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 971 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 64 ஆயிரத்து 469
ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிபட்சமாக மகாராஷ்டிராவில் 296 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 106 பேர் தமிழகத்தில் 94 பேர், ஆந்திராவில் 88 பேர் உத்தரப்பிரதேசத்தில் 67 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.