இலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு

இலங்கையில் 19-25 வயதிற்கு இடைப்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாகவும், தவறுதலான செக்ஸ் புரிந்துணர்வுகள் மாற்றம் ஓரின சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பவையே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் தேசிய எயிட்ஸ் ஒழிப்பு அமைப்பின் பணிப்பாளர் சிறப்பு வைத்தியர் ரஷஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையில்  19-25 வயதிற்கு இடைப்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகளவில் அடையாளம் காணப்படுவதாகவும், அண்மைக்காலமாக இது துரிதமாக அதிகரித்து வருவதாகவும் கூறப்படுவதுடன் இதன் முக்கியமான காரணியாக ஆண் ஓரின சேர்கையாளர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட ஆண்டு காலத்தில் அதிகரித்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாகவும் தேசிய எயிட்ஸ் ஒழிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் சிறுவர் மத்தியில் செக்ஸ் கல்வி குறித்த தெளிவான அறிவு இல்லாமையும் இணையதளங்கள் மூலமாக பரப்பபடும் முறையற்ற செக்ஸ் குறித்த விடயங்களை  கையாள நினைப்பதும் அண்மைக்காலமாக இலங்கையில் அதிகரித்துள்ளதாகவும் இந்த ஆய்வில் வெளிப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.